Home இந்தியா காணாமல் போன கடற்படை விமானத்தின் கருப்புப் பெட்டி செயலிழந்தது!

காணாமல் போன கடற்படை விமானத்தின் கருப்புப் பெட்டி செயலிழந்தது!

341
0
SHARE
Ad

cost guardசென்னை, ஜூலை 8- இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான விமானம் மூன்று விமானிகளுடன் மாயமாய் மறைந்து, இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டதால், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி செயல் இழந்து விட்டது.

விமானம் விழுந்ததாகக் கூறப்படும் சிதம்பரம் கடல் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்களும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இவை தவிர, அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களும் தேடுதல் பணியில்  ஈடுபட்டன. அண்மையில் சேலம் அரசு பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஒலி அதிர்வின் மூலம் ஆராய்ந்து விமானம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

#TamilSchoolmychoice

ஆனாலும், விமானத்தை மீட்க முடியவில்லை.

தேடுதல் பணிக்கு அடிப்படையாக இருந்த கருப்புப் பெட்டியும் இன்றோடு செயலிழந்துவிட்டது.

இதையடுத்துத் தேடுதல் பணி என்னவாகும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த விமானத்தை இயக்கிய துணை விமானி எம்.கே.சோனியின் தந்தை ரதீஷாம் சோனி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டுக்காகச் சேவை செய்யச் சென்ற என்னுடைய மகன் கடலோரக் காவல்படைக்கு சொந்தமான விமானத்துடன் மாயமாகி ஒரு மாதமாகிறது. மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் செத்து வருகிறோம். மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க வெளிநாடுகளின் உதவியைக் கூட கேட்டுப் பெறலாம்.

நாங்கள் கேட்க விரும்பும் 3 கேள்விகள்:

  1. விமானம் மாயமாகி 30 நாட்கள் ஆகின்றன. இதுவரை என்ன செய்தீர்கள்? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?
  2. தேடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உரிய கருவிகள் நம்மிடம் உள்ளதா? அடுத்து இதுபோன்று ஒரு விமானம் மாயமானால் என்ன செய்வீர்கள்? என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள்.
  3. கடற்படையில் இனி பணிக்குச் சேரலாமா? வேண்டாமா? அவ்வாறு பணிக்குச் சேர்ந்து இதுபோன்று விமானம் மாயமானால், அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் பரிசா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.