Home Featured நாடு 1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்

1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்

525
0
SHARE
Ad

மலாக்கா, ஆகஸ்ட் 2 – 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைவரும் சீரழிவான விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், இது ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார்.

Najib-Semenyih-1mdb-5 July“மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. மக்களுக்கு சிறந்தவற்றைச் செய்ய விரும்புகிறேன். சுபிட்சத்தை கொண்டு வர வேண்டும் எனில், இந்தத் தருணத்தில் நமது கவனம் சிதறிவிடக் கூடாது.
3 மில்லியன் கட்சி உறுப்பினர்கள் என் பின்னே உறுதியாக நிற்கின்றனர். எனவே நான் பதவி விலகப் போவதில்லை. அம்னோவின் வலுவான ஆதரவு இருப்பதால் நான் பதவி விலக வேண்டும் என்று கூறி வரும் ஒரே ஒரு நபரிடம் பணிந்துபோக மாட்டேன்” என்றும் நஜிப் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“நஜிப் என்ற தனி மனிதரை அம்னோ உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டாம். மாறாக அம்னோவின் தலைவர் என்ற வகையில் வலுவாக ஆதரிக்க வேண்டும். அம்னோவுக்கு வலுவற்ற தலைவர் இருக்கக் கூடாது. கட்சி வெற்றி பெற வேண்டுமெனில் வலுவான தலைவரே தேவை” என்று கோத்தா லக்சமனா அம்னோ பிரிவின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் நஜிப் தெரிவித்தார்.