Home அரசியல் டோல் உயர்வு: “தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்” – அம்னோ உறுப்பினர்

டோல் உயர்வு: “தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்” – அம்னோ உறுப்பினர்

780
0
SHARE
Ad

51367278616_295x200கோலாலம்பூர், டிச 18 – நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு திட்டத்தை எதிர்த்து தேசிய முன்னணியின் கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸல் மெரிக்கன் நைனா மெரிக்கன்(படம்) கருத்துத் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில், உள் நகரங்களின் டோல் கட்டணங்களை குறைப்பதாக தேசிய முன்னணி  கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பாக தேர்தல் அறிக்கையில் உள் நகரங்களின் டோல் கட்டணங்களைக் குறைப்பதாக தேசிய முன்னணி மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது. பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்த விவகாரத்தை கவனமுடன் நோக்குவார் என்று நம்புகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், டோல் கட்டணங்கள் உயர்வு விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். காரணம் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்வு என்றால் பிரச்சனை இல்லை. இல்லையென்றால் அது மக்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்கும் என்றும் ரீஸல் தெரிவித்துள்ளார்.

பெஸ்ராயா, எல்டிபி மற்றும் என்பிஇ நெடுஞ்சாலைகளின் டோல் கட்டணங்களை மாற்றியமைக்கும் போது மக்களிடம் ஓர் ஆய்வை அமைச்சு நடத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சீரமைப்புக் கொள்கையை நோக்கினால், அதில் பெட்ரோல், சீனி மற்றும் மற்ற பொருட்களின் விலை மெல்ல உயர்ந்து விட்டது என்றும் ரீஸல் கூறியுள்ளார்.

“அரசாங்கம் இது போன்ற விலை உயர்வை செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும். மக்கள் அதனால் மிகவும் சுமையடைவார்கள்” என்றும் ரீஸல் தெரிவித்துள்ளார்.