Home நாடு பினாங்கு டெல்கோ கோபுரத்தில் துணை விமானியின் கைப்பேசி அழைப்பு பதிவு!

பினாங்கு டெல்கோ கோபுரத்தில் துணை விமானியின் கைப்பேசி அழைப்பு பதிவு!

425
0
SHARE
Ad

fariq pilotகோலாலம்பூர், ஏப்ரல் 12 – மாயமான மாஸ் விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து திரும்பி பினாங்கு வழியாக மிகத் தாழ்வான உயரத்தில் பறந்த போது, விமானப் பணியாளர்களில் ஒருவர் யாருக்கோ கைப்பேசி வழியாக அழைத்துள்ள தகவலை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, துணை விமானி பாரிக் அப்துல் ரஹ்மான் தான் அந்த அழைப்பை செய்திருக்கிறார் என்று குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்று நியு ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் பாரிக் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவலை விசாரணை அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

“பினாங்கு டெல்கோ நிறுவனத்தின் கோபுரம் விமானத்தில் இருந்து கிடைத்த அழைப்பை பதிவு செய்துள்ளது. கோபுரத்தின் எல்லையை விட்டு விமானம் வேகமாக பறந்துள்ளதால் அந்த அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது” என்று விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.