Home வாழ் நலம் இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு!

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு!

571
0
SHARE
Ad

king-fish-fryஏப்ரல் 15 – வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளைத்தாக்கினால் இறப்பவர்களை விட இதயத்தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

இதயத்தாக்கிற்கான காரணம்:

#TamilSchoolmychoice

இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் கரோனரித் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, அவ்வழியே இரத்தவோட்டம் குறைவதாலோ அல்லது முற்றிலுமாகத் தடைப்படுவதன் விளைவாகவோ இதயத்தாக்கு உண்டாகிறது. இதயத்திற்குக் கிடைக்கும் இரத்தம் குறிப்பாக இரு முக்கிய காரணங்களால் தடைப்படுகிறது.

1. இரத்தக் குழாய்களில் லிப்பிடுகள் படிந்து குழாய் விட்டம் குறுகுதல்fish-slider
2. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து போதல்.

எனவே ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும்.

மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்படுகிறது.

தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

fish-fryஇதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின்களும் அடங்கியுள்ளன.

மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள் இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.