Home கலை உலகம் விக்ரமுக்கு ஜோடியாகும் சமந்தா!

விக்ரமுக்கு ஜோடியாகும் சமந்தா!

458
0
SHARE
Ad

vikramசென்னை, ஏப்ரல் 18 – கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.

இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் கதையை சொல்ல உள்ளேன்.

அதன்பிறகு அவர் நடிப்பது பற்றி முடிவாகும் என்றார். சமந்தா ஏற்கனவே கோலி சோடா படம் பற்றி தனது இணையத்தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா தற்போது கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், அஞ்சான் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் .