Home இந்தியா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

565
0
SHARE
Ad

pondicherryசென்னை, ஏப்ரல் 21 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத்  தொகுதிகளிலும் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால்,  திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக  தலைவர் விஜயகாந்த் உள்பட தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலுக்கு  இன்னும் 3 நாட்களே உள்ளதால், தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல்  ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 3 லட்சம் அரசு  ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் மட்டும்  சுமார் 1.24 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல்  பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள்  வழங்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தேர்தலில் வாக்களிப்பதற்காக மொத்தம் 60,418 வாக்குப்பதிவு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.  இதனால், எல்லா தொகுதியிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து  வருகிறது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பாஜ  மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்.  ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் பொது கூட்டத்தில் ராகுல் காந்தி  பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு ஆதரவு  திரட்டுகிறார்.

நாளை  மாலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன் எந்த கருத்து  கணிப்பையும் வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம்  கூறியுள்ளது.

மேலும், தேர்தல் தொடர்பாக இசை வெளியீடு,  திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை  நடத்துவது உள்ளிட்ட எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் 2  ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராத தொகையும் விதிக்கப்படும்  என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.