Home வணிகம்/தொழில் நுட்பம் நோக்கியா இனி ‘மைக்ரோசாப்ட் மொபைல்’ என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்!

நோக்கியா இனி ‘மைக்ரோசாப்ட் மொபைல்’ என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்!

388
0
SHARE
Ad

nokiaஏப்ரல் 21 – உலகின் முன்னணி செல்பேசி நிறுவனமான நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி இம்மாத இறுதிக்கு பின் நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் வர்த்தக பிரிவில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் 7.2 பில்லியன் டாலருக்கு இரு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் இம்மாத இறுதியில் முடிவடைவதை அடுத்து இந்த பெயர் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நோக்கியாவின் வணிகபங்காளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனறும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice