Home தொழில் நுட்பம் கூகுள், ஹெச்டிசி கூட்டுத் தயாரிப்பில் நெக்சஸ் 8 டேப்லெட்கள்!

கூகுள், ஹெச்டிசி கூட்டுத் தயாரிப்பில் நெக்சஸ் 8 டேப்லெட்கள்!

447
0
SHARE
Ad

kein-google-tablet-von-htc-L-qEkjJBஏப்ரல் 23 – கூகுள் நிறுவனம் ‘ஹெச்டிசி’ (HTC) யுடன் மீண்டும் இணைந்து செல்பேசித் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் களமிறங்க இருப்பதாக தகவல் வருகின்றது. கூகுள் நிறுவனம் முதல்முறையாக ‘நெக்சஸ்’ திறன்பேசிகளின் தயாரிப்பினை ஹெச்டிசி நிறுவனத்தின் உதவியுடன் தொடங்கியது. அதன் பின்னர் சாம்சங், அசுஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றியது.

தற்போது மீண்டும் கூகுளும், ஹெச்டிசி நிறுவனமும் கைகோர்க்க இருப்பது தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை இரு நிறுவனங்களும் இணைந்து திறன்பேசிகள் அல்லாது நெக்சஸ் 8 டேப்லெட் களை உருவாக்க உள்ளன. இந்த டேப்லெட்கள் எதிர்வரும் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படலாம் என ஆருடம் கூறப்படுகின்றது.

கூகுளின் நெக்சஸ் 7 டேப்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்காததால் தற்போது நெக்சஸ் 8 டேப்லெட்களில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி, வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பினை பெறுவதற்காக ஹெச்டிசியுடன் இணைந்ததாக கூறப்படுகின்றது.