Home தொழில் நுட்பம் நோக்கியாவின் அண்டிரோய்டு திறன்பேசிகள் இனி விண்டோஸ் இயங்குதளத்தில்!

நோக்கியாவின் அண்டிரோய்டு திறன்பேசிகள் இனி விண்டோஸ் இயங்குதளத்தில்!

534
0
SHARE
Ad

Nokia-X-Dual-SIM-2-pngகோலாலம்பூர், ஜூலை 22 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அண்டிரோய்டு வகை திறன்பேசிகளின் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்பேசிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை  வாங்கியது. நோக்கியாவின் தயாரிப்பில் இருந்த அண்டிரோய்டு வகை திறன்பேசியான நோக்கியா ‘எக்ஸ் 2’ (X 2) -வை தங்களது  முக்கிய செயல் திட்டமான ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ (Cloud Computing)-ஐயும்  செயல்படுத்தி வெளியிட்டது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அண்டிரோய்டு இயங்குத்தளத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் சீரிஸ் வகை திறன்பேசிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், மைக்ரோசாஃப்ட் அந்த திறன்பேசிகளை விண்டோஸ் இயங்குத்தளத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து மைக்ரோசாஃப்டின் செல்பேசிகளுக்கான நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கக் கூடிய திறன்பேசிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முன்னோட்டமாக நோக்கியா எக்ஸ் சீரிஸ் வகை திறன்பேசிகள் விரைவில் விண்டோஸ் இயங்குதளத்தில் உருவாக இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த திறன்பேசிகள் நோக்கியா லூமியா தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

விண்டோஸ் வகை திறன்பேசிகள் மீது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அதன் விலை சற்று மலைப்பாகவே இருந்து வந்தது. இதனை போக்க மைக்ரோசாஃப்ட் தற்போது இவ்வகை முயற்சியில் இறங்கி உள்ளதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் கூறுகின்றன.