Home வாழ் நலம் சர்க்கரை நோயை உருவாக்கும் பரோட்டா (ரொட்டிச் சனாய்)!

சர்க்கரை நோயை உருவாக்கும் பரோட்டா (ரொட்டிச் சனாய்)!

950
0
SHARE
Ad

roti-canaiஜூலை 23 – அனைத்து உணவகங்களிலும் பரோட்டா (ரொட்டிச்சனாய்) இல்லாமல் இரவு உணவு இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கிராமங்கள் முதற்கொண்டு பரோட்டா கிடைக்கிறது.

இரவு உணவிற்கு குழந்தைகளிடம் என்னவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள் அவர்களது முதல் பதில் பரோட்டா தான்.  ஆனால் பரோட்டா நல்ல உணவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

p main ggநன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை “பென்சாயில் பெராக்ரைடு” எனும் ரசாயனத்தால் வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.

#TamilSchoolmychoice

“பென்ராயில் பெராக்ஸைட்” என்ற ரசாயனம் தலையில் அடிக்கும் டையில் உள்ள ஒரு ரசாயனம்.  இதுவே மாவில் உள்ள புரதச்சத்துடன் சேரும் போது அது சர்க்கரை நோயை உருவாக்க காரணமாகிறது.

IMG_0041-1இது மட்டுமல்லாமல் “அலோக்ஸன்” என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. இது போக செயற்கை வண்ணம் “மினரல் ஆயில் டேஸ்ட்மேக்கர்ஸ்”, “பிரீசர்வேட்டிவ்ஸ்”, “சாக்ரீன்”, “அஜினோமோட்டோ” போன்ற ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

“அலோக்ஸன் என்ற ரசாயனம், சோதனைக்கூடத்தில் எலிக்கு நீரிழிவு நோய் வர பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்ட்டுள்ளதால் மனிதனுக்கும் இந்த நோய் வருகிறது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.

rotti,மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவில் அதனை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.  மைதாவில் பரோட்டா மட்டுமல்ல, பேக்கரியில் உள்ள கேக் போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.

அதனால் பேக்கரி உணவையும் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலை நாடுகள் பலவற்றில் மைதாவால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ppball270514ஏனெனில் மைதாவால் சிறுநீரகக்கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. கேரளா மாநிலத்தில் பரோட்டாவின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது. ஆகவே பரோட்டா உண்பதை தவிர்போம் நலமாக வாழ்வோம்.