Home இந்தியா காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா 2 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்!

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா 2 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்!

452
0
SHARE
Ad

collageகிளாஸ்கோ, ஜூலை 25 – ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. நேற்று முதல் நாள் போட்டிகள் நடந்தன. இதில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.

48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மீராபாய் சானு சைக்கோம் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்கள்.

இதே போல் ஆண்கள் பளூதூக்கும் போட்டியில்,56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி, வெண்கலம் வென்றார்.

#TamilSchoolmychoice

பளூதூக்கும் போட்டிகளில் மட்டும் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன. மேலும், ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Common_wealthஇதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,2 வெண்கலம் பெற்று 4வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 6தங்க பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா,5 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம்15 பதக்கங்களுடன் இரண்டாவதாக உள்ளது.ஸ்காட்லாந்து 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.