Home இந்தியா புனேயில் நிலச்சரிவு: 17 பேர் பலி! 150 பேர் உயிருடன் புதைந்தனரா?

புனேயில் நிலச்சரிவு: 17 பேர் பலி! 150 பேர் உயிருடன் புதைந்தனரா?

800
0
SHARE
Ad

landslides_vietnam_003புனே, ஜூலை 31 – புனேயில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர்  உயிருடன் மண்ணில் புதைந்து பலியாகினர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில்  புதைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மகாராஷ்டிராவின் அனைத்து பகுதிகளிலும்  தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புனே மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக  அடைமழை பெய்து வருகிறது.

puna,புனே அருகே 120 கிமீ தொலைவிலுள்ள பிரசித்தி பெற்ற பீம்சங்கர்  ஜோதிர்லிங்க கோயில்  உள்ள மாலின் கிராமத்தில் நேற்று காலை கனமழை  பெய்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இதில், அந்த கிராமத்தில்  இருக்கும் 40 வீடுகள் இடிந்து  மண்ணில் புதைந்தன. மேலும் பல வீடுகள்  சேதமடைந்தன. மொத்தம் 750 பேரை கொண்ட இந்த கிராம மக்களில்  பெரும்பாலானவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர்.

punaஇதில், 17 பேர் மண்ணில் உயிருடன் புதைந்து பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், 150 பேர் மண்ணில் உயிருடன் புதைந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. நிலச்சரிவை தொடர்ந்து மாலின் கிராமத்துடனான அனைத்து தகவல் தொடர்புகளும்  துண்டிக்கப்பட்டது.

பக்கத்து ஊர்களுடன் இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டன.   தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 100 பேர்  குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.