Home நாடு ஜோகூர், குளுவாங்கில் அமரர் சீனி நைனா முகம்மது நினைவஞ்சலிக் கூட்டம்

ஜோகூர், குளுவாங்கில் அமரர் சீனி நைனா முகம்மது நினைவஞ்சலிக் கூட்டம்

547
0
SHARE
Ad

 JB Late Seeni Naina memorial meetingகுளுவாங், ஜோகூர், ஆகஸ்ட் 23 – அண்மையில் அமரரான இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் இழப்பு குறித்து உள்நாட்டிலும், உலகின் மற்ற பகுதிகளிலிருந்தும் அனுதாபச் செய்திகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், அன்னாரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம், நாட்டின் பல இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 22ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் குளுவாங் நகரிலும் அன்னாரின் நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அன்னாரின் நினைவுகளை, அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வண்ணம் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள், அவரது பரந்த அறிவைப் பகிர்ந்து கொண்டவர்கள், அவரது அபிமானிகள் என பலரும் ஜோகூர் வட்டாரத்தில் இருந்து கலந்து கொண்டார்கள்.

#TamilSchoolmychoice

குறிப்பாக, அமரர் சீனி நைனா முகம்மதுவின் தமிழறிவால் பயன்பெற்ற ஆசிரியர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

முத்து நெடுமாறன் உரை

இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில், செல்லியல், செல்லினம் இணையத் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர், முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மறைந்த சீனி நைனா முகம்மது அவர்களுடனான தனது நினைவலைகளையும், பழகிய அனுபவங்களையும் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அமரர் சீனி நைனா முகம்மதுவின் பணிகள் குறித்த, ஆசிரியர் வேதநாயகத்தின் காணொளிப் படைப்பு ஒன்றும் இந்த நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மலேசிய மற்றும் ஜோகூர் மாநில பாவலர் மன்றத்தின் படைப்பொன்றும் இடம்பெற்றது.

ஆசிரியர் வாஞ்சிதேவனும் இந்த நிகழ்வில் உரையாற்றி இறையருட் கவிஞரின் பங்களிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

ஆசிரியர் மகேந்திரனின் கவிதைப் படைப்பு ஒன்றும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக இடம் பெற்றது.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், இறையருட் கவிஞரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தின் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

photo 3

photo 5

photo 4

photo 1