Home உலகம் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா

430
0
SHARE
Ad

pentagon,வாஷிங்டன், ஆகஸ்ட் 28 -தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் ஜான் கிர்பி சுட்டிக்காட்டினார்.

இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியை இழந்து தவிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நீண்ட காலமாக தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம், கடந்த கோடை காலம் முதல்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் கிர்பி தெரிவித்தார்.

pentagonபொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதையொட்டி பாகிஸ்தானுடன் தாங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளதாகவும் கிர்பி கூறினார். தங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தற்போது சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.