Home நாடு அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் செல்லியலின் திட்டம் அறிவிப்பு

அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் செல்லியலின் திட்டம் அறிவிப்பு

1407
0
SHARE
Ad

IMG_2762

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 –  மறைந்த இறையருட் கவிஞர் அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் பங்களிப்பும், தமிழ் படைப்புகளும் என்றும் காலத்தால் நிலைத்திருக்கும் வண்ணம், அன்னாரின் தமிழ் படைப்புகளையும், குறிப்பாக அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘உங்கள் குரல்’ பத்திரிக்கைப் பிரதிகளையும் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யவும், மின் நூலாக மாற்றவும், செல்லியல், செல்லினம் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் முன்வந்துள்ளார்.

இந்தத் திட்டம் ‘செல்லியல்’ தகவல் ஊடகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும்.

#TamilSchoolmychoice

இந்த திட்டத்தின் வெற்றிக்காக முதல் கட்டமாக, தனது சொந்த நன்கொடையாக 10,000 மலேசிய ரிங்கிட் வழங்கவிருப்பதாகவும் முத்து நெடுமாறன் அறிவித்துள்ளார்.

மலேசியத் தமிழ் படைப்புலகின் பெருமைகளில் ஒன்றாக கருதப்படுபவரான அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் கைவண்ணங்கள் காலத்தால் அழியாமல் பாதுகாக்கப்படவும், அதன் மூலம் மலேசியத் தமிழுலகம் மேலும் செம்மை பெறவும், எதிர்கால சந்ததியினரும் அன்னாரின் அறிவாற்றலைப் பகிர்ந்து பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும் இந்தத் திட்டத்தை ‘செல்லியல்’ தொடங்கியுள்ளது.

மலேசியாவில் இணையத் தளத்திலும், திறன் பேசிகளின் (Smart Phone) செயலிகளின் வழியாகவும் ஒருங்கே இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் தகவல் ஊடகமான செல்லியல், இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துள்ளது.

இந்த திட்டத்தில் செல்லியலுக்கு உறுதுணையாக செயல்பட  உத்தமம் மலேசியா சார்பில், அதன் தலைவர் திரு சி.ம.இளந்தமிழ் அவர்களும் இணைந்துள்ளார்.

உத்தமம் என்பது உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்ற பெயர் கொண்ட அனைத்துலக அமைப்பாகும். இந்த அமைப்பின் மலேசியக் கிளையின் தலைவராக இளந்தமிழ் செயலாற்றி வருகின்றார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

இந்த திட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் பங்கு பெற விரும்புபவர்கள், ஒத்துழைப்பு வழங்க விழைபவர்கள், இந்த திட்டம் வெற்றி பெற பொருளுதவி வழங்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைய முகவரியில் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் இளந்தமிழ் குறிப்பிட்டார்.

INFITT Malaysia Office:

No 48A, 1st Floor,

Jalan 1/19, PJ Old Town

Petaling Jaya, Selangor Darul Ehsan.

அஞ்சல் : kural@selliyal.com

இணையம் : http://kural.selliyal.com