Home வாழ் நலம் முதிர்ச்சியை தடுத்து ஆண்மை சக்தியை அதிகரிக்கும் டுரியன் பழம்!

முதிர்ச்சியை தடுத்து ஆண்மை சக்தியை அதிகரிக்கும் டுரியன் பழம்!

1312
0
SHARE
Ad

Durianசெப்டம்பர் 19 – டுரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய டுரியன் பழம் இனிப்பு சுவையை  கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் இப்பழம், பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை  கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில டுரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது  என கருத்தும் வெளியாகிறது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை  டுரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும்  உயர்நிலை கொழுப்பை  அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு டுரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது.

#TamilSchoolmychoice

டுரியன்  பழத்தில் கால்சியம், கொழுப்பு, இரும்பு, தாமிரம்,  வைட்டமின் சி,  நார்ச்சத்து , துத்தநாகம், பொட்டாசியம், உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் டுரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம்  நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது.

durian-insideடுரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை  நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. டுரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும்  பயன்படுகிறது. டுரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

டுரியன் மரத்தின் வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் இரத்த சோகையில் இருந்து குணம் பெறலாம். டுரியன் பழம்  கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

டுரியன் பழத்தின்  தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. டுரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை  சரிசெய்கிறது.

கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் டுரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும்  ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும்.

Tropical fruit - Durianடுரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே  டுரியன் பழம் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பலப்படும். இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. டுரியன் பழத்தில்   எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும்  கட்டிகளை தடுக்கிறது. தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து  ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது.

டுரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு டுரியன் பழத்தோல் மருந்தாக பயன்படுகிறது.