Home தொழில் நுட்பம் ஐஒஎஸ் 8-ன் சிறப்பு அம்சங்கள்!

ஐஒஎஸ் 8-ன் சிறப்பு அம்சங்கள்!

588
0
SHARE
Ad

IOS 8

கோலாலம்பூர், செப்டம்பர் 23 – முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், சமீபத்தில் தனது இயங்குதளமான ஐஒஎஸ் 8-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

மின்கலன்களின் திறனை குறைக்கின்றது, ‘வைஃபை’ (Wifi) திறனை குறைக்கின்றது என்பது போன்ற எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும், ஆப்பிள் பயனர்களால் தொடர்ந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஆப்பிள் ஐஒஎஸ் 8-ல் அறிமுகமாகி உள்ள சிறந்த அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கீழே காண்போம்:

‘பல்பணித் திறன் கொண்ட மின்னஞ்சல்’ (Multitasking email):

ஆப்பிள் பயனர்கள் மின்னஞ்சல்களை பயன்படுத்தும் போது வெறுப்படையும் ஒரு நிகழ்வு என்னவென்றால், ஒரு சமயத்தில் பயனர்கள் ஒரு மின்னஞ்சல் டேப்-ஐ மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றொன்றை பார்க்க வேண்டுமானால் ஏற்கனவே திறந்து வைத்துள்ள டேப்-ஐ மூட வேண்டும். இது பயனர்களுக்கு அவசரகாலத்தில் பெரும் சிரமத்தை கொடுத்து வந்தது. எனினும் இந்த குறைபாடு தற்போது அறிமுகமாகி உள்ள ஐஒஎஸ் 8 இயங்குதளத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் கணினியை பயன்படுத்து போது உணரும் சௌகரியத்தை, ஐபோன்களிலும் உணரலாம்.

‘ஆப்பிள் அல்லாத விசைப்பலகை’ (Third party keyboards):

மிக நீண்ட காலமாக பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் அளித்து வந்த பின்னூட்டங்களில் இந்த புதிய விசைப்பலகை வசதியும் ஒன்று. ஆப்பிள் நிறுவனத்தின் விசைப்பலகையை காட்டிலும், கூகுள் நிறுவனத்தின் அண்டிரோய்டு விசைப்பலகை பயர்களுக்கு தேவையான பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட ஆப்பிள், புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் அல்லாத விசைப்பலகைகளைப் பயன்படுத்தும் வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

‘ஊடாடும் அறிவிப்புகள்’ (Interactive notifications):

பயனர்களுடன் ஊடாடும் அறிவிப்புச் செயலிகளை ஆப்பிள் உருவாக்கி உள்ளது. இந்த புதிய வசதி பெற பயனர்கள், எந்த ஒரு புதிய செயலிகளையும் மேம்படுத்தத் தேவை இல்லை. இதன் மூலம் பயனர்களுக்கு தேவையான குறுந்தகவல் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும், பயனர்கள் குறிப்பிட்ட அந்த குறுந்தகவலை சேமிக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும் என்றால் கட்டளைகள் மூலமாக அதனை செயல்படுத்தும் முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

ஆப்பிள் சிரி-ஐ இயக்கும் கட்டளைகள்:

ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த மென்பொருளான சிரி, ஒலித் துணுக்குகள் மூலம் பயனர்களுக்குத் தேவையான தகவல்களைத் தர வல்லது. மேலும் இது மற்ற மென்பொருள் போல் அல்லாமல் பயனர்களின் தேவைகளை ஊடாடும் திறன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், முந்தைய இயங்கு தளங்களில் சிரியை இயக்க, தொடுதிரைகளில் உள்ள பொத்தான்களை அழுத்த வேண்டும். ஆனால் ஐஒஎஸ் 8-ல் கட்டளைகள்  மூலமாகவே சிரியை இயக்க முடியும்.

ஆப்பிள் நிறுவனம் இதுபோல் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சிறப்பான வசதிகளை ஐஒஎஸ் 8-ல் மேம்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.