Home அவசியம் படிக்க வேண்டியவை ஐ.நா. பேரவையில் – அமெரிக்க நிகழ்வுகளில் இந்தியில் உரையாற்றிய மோடி!

ஐ.நா. பேரவையில் – அமெரிக்க நிகழ்வுகளில் இந்தியில் உரையாற்றிய மோடி!

440
0
SHARE
Ad

modi-new_650_093014120910நியூயார்க், செப்டம்பர் 30 –  அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, தனது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஐ.நா. பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.  அங்கே அவர் இந்தியில் உரையாற்றினார்.

ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில்தான் உரையாற்றுவார் என இரு வாரங்களுக்கு முன்பே இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.

இதே பேரவையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் இந்தியில்தான் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், ஐ.நா.வில் முதலில் இந்தியில் பேசிய பெருமைக்குரியவர் வாஜ்பாய் தான் என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஐ.நா.வில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது 35 நிமிட சிறப்புரையை இந்தி மொழியிலேயே ஆற்றினார்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்திக்கும் சமயங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் இந்தியில்தான் பேசுகிறார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் உரையாற்றிய நரேந்திர மோடி எல்லாவற்றிலும் இந்தியில்தான் உரை நிகழ்த்தினார்.

ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர் அவர் என்றாலும், தனது உரைகளை எழுதி வைத்துக் கொண்டு பேசுவதில்லை என்பதால், தனது உரைகளில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவும், தனது உரையின் ஓட்டம் தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தோடும் அவர் இந்தியிலேயே அமெரிக்காவில் மேடைப் பேச்சுகளை நிகழ்த்துகின்றார்.

கலந்து கொள்பவர்கள் இந்தி தெரியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்காக ஆங்கில மொழி பெயர்ப்புகள், அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே கேட்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஐநாவில் நிகழ்த்திய  உரையின் சாராம்சம்

ஐநாவில் பேசும் போது, எந்த ஒரு தனி நாடும் உலகத்துக்கு கட்டளையிட முடியாது என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

“இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்தியாவின் தத்துவம். இந்திய மக்களின் நம்பிக்கையும், உள்ளத்தில் உள்ள பேரார்வத்தையும் நான் அறிந்துள்ளேன். 125 கோடி மக்களை கொண்ட இந்தியாவிடம் இருந்து இந்த உலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் அறிவேன்,” என்றார் மோடி.

உலக நாடுகள் அனைத்துமே அனைத்துலக விதிகளையும், ஒழுங்குகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஐ.நா., அமைதிப்படைக்கு மேலும் வலு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.