Home தொழில் நுட்பம் 20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் உலவி நெட்ஸ்கேப் நேவிகேட்டர்! 

20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் உலவி நெட்ஸ்கேப் நேவிகேட்டர்! 

527
0
SHARE
Ad

Netscape Navigator 500 x 300கோலாலம்பூர், அக்டோபர் 16 – இணைய உலகத்தின் முதல் உலவியான (browser) ‘நெட்ஸ்கேப் நேவிகேட்டர்’ (NETSCAPE NAVIGATOR), கடந்த 13-ம் தேதியுடன் தனது  வெற்றிகரமான 20 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

கணிப்பொறிகள் உருவாக்கப்பட்ட காலத்தில், தகவல் பரிமாற்றம் என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. இந்நிலையில் 1960-ம் ஆண்டு, வின்ட் செர்ஃப் என்பவர் உலகளாவிய இணையத்தின் முதல் அத்தியாயமான ‘ஆர்பாநெட்’ (ARPANET)-ஐ உருவாக்கினார். இதன் மூலம் கணினிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி சாத்தியமானது.

பின்னர் 90-களில் டிம் பெர்னர்ஸ்-லீ எனும் கணிப்பொறி வல்லுநர் ‘உலகளாவிய  வலை’ (World Wide Web)-ஐ உருவாக்கினார். அதன் பிறகு இணையம் சாத்தியமானாலும், இணையத்தை முழுவதுமாக பயன்படுத்த தனிச்சையான மென்பொருள் தேவைப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த நிலையில், 1994-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, ஜிம் கிளார்க் மற்றும் மார்க் ஆண்டர்சென் ஆகியோரால் வழிநடத்தப்பட்டு வந்த ‘மொசைக் கம்யூனிகேசன்ஸ்’ (Mosaic Communications) எனும் நிறுவனம், முதல் முதலாக இணைய உலவியான நெட்ஸ்கேப் நேவிகேட்டரை அறிமுகப்படுத்தியது.

எதிர்கால உலகத்தில் அனைத்தும் இணையத்தால் தீர்மானிக்கப்படும் என்று அன்றே கணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நெட்ஸ்கேப் நேவிகேட்டர், இன்றைய இணைய வணிகத்தின் முதல் அச்சாரம் என்பது மறுக்க முடியாத உண்மை.

நெட்ஸ்கேப் நேவிகேட்டர் தொடர்பாக மார்க் ஆண்டர்சென் அன்று கூறுகையில், “இணையப் பயன்பாடுகளில் நெட்ஸ்கேப் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் மூலம், உலக இணையத்திற்கான புதிய முயற்சிகள் சாத்தியப்படும்” என்று கூறியுள்ளார்.

முதல் உலவி  14.4kbps-ல் இயங்கக் கூடியதாக இருந்தது. ஒரே நேரத்தில் பல வலையமைப்புகளை அணுக முடியும் என்பது, பயனர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அதன் பின்னர் மைக்ரோசாப்ட்டின் ‘இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்’ (Internet Explorer) பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியது.

தற்சமயம் நாம் கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், பயர் பாக்ஸ் என பல்வேறு உலவிகளைப் பயன்படுத்தினாலும், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்பது இணையத்தின் கடந்த கால வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.