Home இந்தியா உயிரை மாய்த்துக் கொண்ட 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – ஜெயலலிதா அறிவிப்பு

உயிரை மாய்த்துக் கொண்ட 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – ஜெயலலிதா அறிவிப்பு

482
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, அக்டோபர் 20 – உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், மரணமடைந்த 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களை கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல்,

“என் மீது மிகுந்த பேரன்பு கொண்டுள்ள தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; குறிப்பாக, என் இதயத்தின் ஆழத்தில் வேர் விட்டிருக்கும் மாணவ செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர்”.

#TamilSchoolmychoice

“மேலும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வலியை தருகிறது.”

“எனக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மரணமடைந்த 193 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”

“மேலும்,மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தன்னையே மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.