Home தொழில் நுட்பம் பெய்ஜிங்கில் சீன மொழி பேசி ஆச்சரியப்படுத்திய மார்க் சக்கர்பெர்க்! (காணொளியுடன்)

பெய்ஜிங்கில் சீன மொழி பேசி ஆச்சரியப்படுத்திய மார்க் சக்கர்பெர்க்! (காணொளியுடன்)

511
0
SHARE
Ad

mark-zuckerberg (1)பெய்ஜிங், அக்டோபர் 24 – கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னாள் நடைபெற்ற ஒரு கலந்தாய்வின் போது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தான் மேண்டரின் மொழியை கற்று வருவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த புதன் கிழமை சீனப் பல்கலைக்கழகம் ஒன்றில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேண்டரின் மொழியை சரளமாக பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சீனாவின் வடக்கு மற்றும்  தென்மேற்கு பகுதிகளின் வட்டார மொழி மேண்டரின். அந்நாட்டின் பாரம்பரிய மொழியாக கருதப்படுகின்றது. கடந்த சில வருடங்களாக அந்த மொழியை கற்று வந்த சக்கர்பெர்க், கடந்த புதன் கிழமை சீனாவில் முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களின் வட்டார மொழியான மேண்டரினில் பதில் அளித்துள்ளார்.

அந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது சீனாவில் பெருகி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பேஸ்புக்கின் வரலாறு, மேலும், பேஸ்புக் நிறுவனம் தற்போது நடத்தி வரும் உலகை இணையத்தால் இணைத்தல் பற்றிய பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:-

“கடந்த புதன் கிழமை டிசிங்குவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு சீன மொழியில் உரையாற்றினேன். அந்த மொழியில் நடைபெற்ற எனது முதல் கலந்தாய்வு அது ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், மேண்டரின் மொழியை சரளமாக பேசிக் கற்றுக் கொண்டதால் தனது மனைவி பிரிசில்லா சேனின் பெற்றோருடன் மிக எளிதாக உரையாட முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

மார்க் சக்கர்பெர்க் சீன மொழியைக் கற்றதனால், சீனாவில் நடைமுறையில் உள்ள பேஸ்புக் தடைகளை, அந்நாட்டு அரசுடன் நேரடியாகப் பேசி தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக பேஸ்புக் வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனா மொழி பேசும் மார்க் சக்கர்பெர்க்கின் காணொளியைக் கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=S5qXkPNk5cA