Home நாடு அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: மரபணு ஆதாரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல – எதிர்தரப்பு

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: மரபணு ஆதாரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல – எதிர்தரப்பு

408
0
SHARE
Ad

Anwar-Ibrahim-565x375புத்ராஜெயா, அக்டோபர் 30 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மூன்றாம் நாளாக இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அன்வார் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் ராம் கர்பால் சிங், இந்த வழக்கில் சாட்சியாக வைக்கப்பட்டிருந்த மரபணு ஆதாரங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.

அந்த மரபணு மாதிரிகள் வேறு ஒருவருடையதாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அது அன்வாருடையது அல்ல என்றும் ராம் கர்பால் வாதாடினார்.

#TamilSchoolmychoice

மேலும், அன்வாரின் சட்ட ஆலோசனைக்குழுவின் ஒருவரான சங்கீட் கவுர் கூறுகையில், இந்த வழக்கில் ஆதாரமாகக் காட்டப்பட்ட ‘மேல் ஒய் – Male Y’ மரபணு யாருடையது என்பதற்கான சரியான ஆதாரம் காட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த மரபணு மாதிரிகள், கடந்த 2008 -ம் ஆண்டு, ஜூலை 16-ம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக அன்வார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருக்கு வழங்கப்பட்ட பல்துலக்கும் தூரிகை, துடைக்கும் துணி மற்றும் தண்ணீர் குடுவை ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் சங்கீட் கவுர் குறிப்பிட்டார்.

இது குறித்து சங்கீட் மேலும் கூறுகையில், “அந்த மரபணு மாதிரியும், முகமட் சைபுல் புகாரி அஸ்லானின் ஆசன வாயில் இருந்து எடுக்கப்பட்ட மரபணுவும் ஒத்துப் போனதாக இந்த வழக்கில் ஆதாரமாகக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த மரபணு மாதிரி யாருடையது என்பது கூறப்படவில்லை. ‘மேல் ஒய்’ என்று அந்த மரபணு மாதிரி அழைக்கப்படுகின்றது. மேல் ஒய் என்பது யார்? என்பது எங்களின் கேள்வி” என்று சங்கீட் கேள்வி எழுப்பினார்.