Home தொழில் நுட்பம் ‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

437
0
SHARE
Ad

microsoftகோலாலம்பூர், டிசம்பர் 17 – மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘ஸ்கைப்’ (Skype)-ல் முதல் முறையாக குரல் மொழி பெயர்ப்பு சேவையினை அறிமுகப்படுத்தி உள்ளது.

பரிசோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வசதியில், ஸ்பானிஷ் மொழி உரையாடல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு  தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ முதன் முதலாக  அறிமுகப்படுத்தியது.

#TamilSchoolmychoice

குரல் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கும், காணொளி மூலம் கலந்துரையாடவும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் வெகு விரைவில் பயனர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அண்ட்ரோய்டு புரட்சி மற்றும் திறன்பேசிகளின் புதிய செயலிகள் காரணமாக, ஸ்கைப் அலுவல் ரீதியான மென்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்-ல் குரல் மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்த முயற்சித்து வந்தது. இந்த புதிய முயற்சி மூலமாக பயனர்கள் மொழி தெரியாத நபர்களுடனும் ஸ்கைப் வழியே கலந்துரையாட முடியும்.

பயனர்களுக்குத் தேவையான குரல் மொழி பெயர்ப்புப் பணிகளை ஸ்கைப்பே கவனித்துக் கொள்ளும். மேலும், இதில் ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனியான குரல் மொழிபெயர்ப்பு வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட மைக்ரோசாப்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கான பரிசோதனை முயற்சியினை வெளியிட்டது. இதில் முதல்முறையாக, ஸ்பானிஷ் மொழி உரையாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரி குர்தீப் பால் கூறுகையில், “மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி உள்ள இந்த  வசதி மூலம் உலகத்தை இணையத்தால் இணைக்க முடியும்”.

“இதுவரை மொழிரீதியாக தடைபட்டு வந்த பேச்சுவார்த்தை நீங்கி, யாரும் யாருடன் வேண்டுமானாலும் கலந்துரையாட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனை முயற்சி வெற்றி அடையும்பட்சத்தில், விரைவில் உலகின் அனைத்து முக்கிய மொழிகளுக்கான ஸ்கைப் குரல் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.