Home உலகம் பாகிஸ்தானில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்!

பாகிஸ்தானில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்!

468
0
SHARE
Ad

pakisthanபெஷாவர், டிசம்பர் 22 – பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் நுழைந்து 132 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகளை அழிப்பதில் நவாஸ் செரீப் அரசு தீவிரமாக உள்ளது.

கடந்த 2008–ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது ரத்து செய்யப்பட்டு தண்டனையை நிறைவேற்ற தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பைசலாபாத் சிறையில் 2 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

அதை தொடர்ந்து பிரதமர் நவாஸ் செரீப்புக்கு தலிபான்கள் மிரட்டல் விடுத்தனர். தீவிரவாதிகளை தூக்கிலிடுவது தொடர்ந்தால் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை கொலை செய்வதாக மிரட்டினர். இருந்தும் நவாஸ் செரீப் பின்வாங்கவில்லை.

#TamilSchoolmychoice

ரஷீத்குரோஷி, ஷூபேர் அகமது, குலாம் சர்வார் மற்றும் ருஸ்சி என்கிற அக்ல கூ அகமது ஆகிய 4 பேரும் நேற்று தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் ருஸ்சி ரஷியாவை சேர்ந்தவர்.

பாகிஸ்தானில் மொத்தம் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் 500–க்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாதிகள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து அடுத்தடுத்து தூக்கிலிடப்பட உள்ளனர்.

எனவே இவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறைகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை மீட்டுச்செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா. மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெஷாவர் ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான் தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 300–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 ராணுவ குழுக்கள் மோப்ப நாய்களுடன் பல இடங்களில் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் மற்றும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.