Home உலகம் பெஷாவர் குழந்தைகளின் மரணம் எங்கள் இதயங்களை வலிக்கச்செய்கிறது – அல்கொய்தா!

பெஷாவர் குழந்தைகளின் மரணம் எங்கள் இதயங்களை வலிக்கச்செய்கிறது – அல்கொய்தா!

617
0
SHARE
Ad

all koaithaஇஸ்லாமாபாத், டிசம்பர் 23 – பாகிஸ்தானின் பெஷாவர் இராணுவ பள்ளியின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து தெற்காசிய அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகினர்.   உலகை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தாலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் மன உறுதியை குலைக்கவே இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக தெற்காசியாவுக்கான அல்கொய்தா பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா முகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையில் அல்கொய்தா சார்பாக அவர் கூறியதாவது:- “பெஷாவர் சம்பவத்தால் எங்களது இதயங்கள் வலியால் துடிக்கின்றன. இச்சம்பவம் எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது”.

“பாகிஸ்தான் இராணுவத்தின் குற்றங்களும், கொடுமைகளும் எல்லை கடந்து விட்டன. மேலும் அமெரிக்காவின் அடிமையாக பாகிஸ்தான் இராணுவம் மாறியது மட்டுமின்றி இஸ்லாமிய இனப்படுகொலையும் நடத்தி வருகின்றது.”

“அல்லாவின் எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கும் நாம், அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நாம் பழிவாங்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.