Home வாழ் நலம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் எலுமிச்சை!

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் எலுமிச்சை!

802
0
SHARE
Ad

lomenஜனவரி 24 – எலுமிச்சையின் காய், பழம், இலை, வேர், தோல் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர், சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.

இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி எலுமிச்சை சாறு பருகுவதால் காய்ச்சல் விரைவில் தணிகிறது என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள்.

எலுமிச்சை சாறு மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி எரிச்சலை உண்டாக்காததும் கூட. வயிற்றுக் கோளாறு, ஜீரணக் கோளாறு, என்பது அனைவருக்கும் மிகப் பொதுவான ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

அந்நிலையில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் சர்க்கரையும் சேர்த்துப் பருகுவதால் பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் விடிவு ஏற்படுகின்றது.

நம் உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கின்றது.

அடிபட்டு உராய்வதால் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வெளியாகும் போது சில துளிகள் எலுமிச்சை சாற்றை காயங்களின் மேல் விடுவதால் உடனடியாக ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

Lemon-Juiceஆஸ்துமா நோயாளிகள் ஜீரணம் ஆகாத உணவுப் பண்டங்களைத் தவிர்த்து அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் ஆஸ்துமா என்னும் கொடிய இரைப்பு நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு பருகுவதோடு படுக்க போகும் முன்னும் இதுபோலப் பருக வேண்டும்.

எலுமிச்சை சாறு ஈரலின் செயல்பாட்டை செம்மைப்படுத்த வல்லது. மேலும் ரத்தத்தில் உள்ள அமில உப்பை (யூரிக் ஆசிட்) இது கரைப்பதோடு தேவையற்ற நச்சுக்களையும் போக்கவல்லது.

எலுமிச்சை சாற்றில் கலந்துள்ள சிட்ரிக் அமிலம் பித்தப்பையிலுள்ள கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக கற்களையும் கரைக்க உதவுகிறது. மேலும் உடலில் பல பகுதிகளிலும் சுண்ணாம்புச் சத்து படிவத்தை தடுக்க உதவுகிறது.