Home வாழ் நலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிவி பழம்!

ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிவி பழம்!

1068
0
SHARE
Ad

kiwi-fruit-sleepy-snacks-2706-deபிப்ரவரி 24 – கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

மேலும் ஏப்ரல் 2004-ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி பழம் போல் வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது.

#TamilSchoolmychoice

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும்.

ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் என்னும் அமிலம் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் என்னும் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக  இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களையும் தருகிறது.

Kiwiமேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. உடலை ஆரோக்கியமாக மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது.

ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.மேலும் இரும்புச்சத்து கொழுப்பை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.

இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் அமிலம் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.