Home உலகம் ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை!

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை!

337
0
SHARE
Ad

51820645மாஸ்கோ, மார்ச் 1 – ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நெம்ஸ்ட்சோவ் (54) (படம்) நேற்று முன்தினம் தலைநகர் மாஸ்கோவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

போரிஸ் நெம்ஸ்ட்சோவ், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு மாஸ்கோவின் மத்தியப் பகுதியில் இருக்கும் கிரம்ளின் மாளிகை அருகே காரில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரைத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

im3புதின் அரசிற்கு எதிரான கருத்துக்களை கடுமையாக முன்வைத்து வந்த போரிஸ் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். உக்ரைனில் ரஷ்யாவின் ஆளுமையையும், புதினின் பேராசையையும் கடுமையாக விமர்சித்த அவர், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை (இன்று) மிகப் பெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை அந்நாட்டு உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

போரிஸ் கொலை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள புதின், அவரின் எதிரிகள் சிலர் கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் மாளிகைக்கும், போரிஸ் நெம்ஸ்ட்சோவ் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் பொது விமர்சகர்களால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.