Home தொழில் நுட்பம் அனைத்துலக செல்பேசி மாநாட்டில் சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகம்!

அனைத்துலக செல்பேசி மாநாட்டில் சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகம்!

577
0
SHARE
Ad

sam2

கோலாலம்பூர், மார்ச் 2 – சாம்சுங்கிற்கு, ஆப்பிள் மற்றும் எச்டிசி நிறுவனங்களிடம், கடந்த வருடம் இழந்த திறன்பேசிகளுக்கான சந்தையை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் மத்தியில் குறையாத தங்கள் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை திருப்திபடுத்த வேண்டிய சூழல்.

இந்நிலையில் அந்நிறுவனம் ‘கேலக்ஸி எஸ் 6′ (Galaxy S6) மற்றும் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்‘ (Galaxy S6 Edge) திறன்பேசிகளை நேற்று மாலை அனைத்துலக செல்பேசி மாநாட்டில் அறிமுகப்படுத்தியது.

#TamilSchoolmychoice

ஐபோன் 6 திறன்பேசிகளுக்கு போட்டி அளிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் இந்த இரு திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி கீழே காண்போம்:

இயங்குதளம்:

சாம்சுங் நிறுவனம் தனது டைசன்‘ (Tizen) இயங்குதளத்தை உயர் ரக திறன் பேசிகளில் களமிறக்கும் அளவிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள அண்டிரொய்டு லாலிபாப்‘ (lollipop) இயங்குதளத்தை எஸ் 6 திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது.

sam6பிராசசர்‘ (Processor):

திறன்பேசிகளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் பிராசசர் ஒரு திறன்பேசிக்கு சிறப்பானதாக அமைய வேண்டியது அவசியம். வழக்கமாக ஸ்நாப் டிராகன்‘ (Snapdragon) பிராசசரை தேர்வு செய்யும் சாம்சுங், இம்முறை தனது சொந்த தயாரிப்பான எக்சிநாஸ் 7420 பிராசஸர்‘ (Exynos 7420 processor)-ஐ இந்த திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது. இவை Snapdragon 800-ஐ விட 35 சதவீதம் மின்கலனின் சக்தியை சேமிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வகை பிராசசர் 4ஜி அமைப்பிற்கு ஒத்துழைக்காது.

இதன் வேகம் 2.1GHz ஆகும்.

முதன்மை நினைவகம் (RAM):

செயலிகளின் செயல்பாட்டை நிர்ணயிக்கும் முதன்மை நினைவகம் 3 ஜிபி ஆகும். திறன்பேசிகளுக்கான நினைவகத்தை பொருத்தவரை 32ஜிபி, 64ஜிபி அல்லது 128ஜிபி என்ற அளவில் உள்ளன.

கேமரா‘ (Camera):

எஸ் 6 மற்றும் எஸ் 6 எட்ஜ் திறன்பேசிகளில் பின்புற கேமரா 16 எம்பியும், தம்படத்திற்காக (செல்ஃபி) 5 எம்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஐபோன் 6 பிளஸ்-ஐ விட கூடுதல் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடிவமைப்பு:

பயனர்கள் திறன்பேசிகளின் செயல்திறன்களுக்கு காட்டும் ஆர்வத்தை அதன் வடிவமைப்பிற்கும் காட்டுகின்றனர். சாம்சுங்கை பொருத்தவரை உயர் ரக திறன்பேசிகளையும் வலிமையான பிளாஸ்டிக்கில் மட்டுமே செய்து வந்தது. இந்த குறையை போக்குவதற்காக எஸ் 6 திறன்பேசிகளின் வெளிப்புற வடிவமைப்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக இருக்கும் இந்த திறன்பேசிகள் சாம்சுங்கின் இழந்த பெருமையை மீட்டுத் தருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

சாம்சுங் எஸ் 6 திறன்பேசிகளின் காணொளியை கீழே காண்க: