Home நாடு ஜெர்மன்விங்ஸ் பேரிடர்: விமானத்தின் கடைசி நொடிகளை போனில் பதிவு செய்துள்ள பயணி!

ஜெர்மன்விங்ஸ் பேரிடர்: விமானத்தின் கடைசி நொடிகளை போனில் பதிவு செய்துள்ள பயணி!

488
0
SHARE
Ad

Germanwings1கோலாலம்பூர், ஏப்ரல் 1 – ஜெர்மன் விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கும் கடைசி நிமிடங்களை, இறந்த பயணிகளில் ஒருவர் தனது செல்பேசியில் பதிவு செய்துள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் கிடந்த அந்த செல்பேசி கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜெர்மனைச் சேர்ந்த ‘பில்ட் டெய்லி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த செல்பேசியில் பதிவாகியுள்ள காணொளியைப் பார்த்த விசாரணைக் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், அதில் துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே மலையை நோக்கி தாழ்வாகக் கொண்டு செல்லும் போது, பயணிகள் “அய்யோ கடவுளே” என்று அலறியுள்ளது பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், யாரோ இரும்பு கதவை 3 முறை பலமாக இடிப்பது போன்ற சத்தம் அதில் பதிவாகியுள்ளதாகவும், அது நிச்சயமாக காக்பிட் அறையின் கதவை விமானி உடைக்க முயற்சி செய்த சத்தம் தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகின்றது என்று ‘பில்ட் டெய்லி’ குறிப்பிட்டுள்ளது.

அந்த காணொளியில் கடைசியாக விமானம் மலையை நெருங்கும் போது ஒரு பலமான ஆட்டம் கண்டு, பின்னர் பயணிகளின் மிகப் பெரிய அலறல் சத்தத்துடன் முடிவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பேரிடரை விசாரணை செய்யும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிகாரி பிரிஸ் ராபின் இது குறித்து கூறுகையில், “அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்து விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒருவேளை மக்கள் யாராவது அங்கிருந்து செல்பேசியை எடுத்திருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.