Home தொழில் நுட்பம் இணைய சமநிலையை பேஸ்புக் எதிர்க்கிறதா? – மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!

இணைய சமநிலையை பேஸ்புக் எதிர்க்கிறதா? – மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!

343
0
SHARE
Ad

internetகோலாலம்பூர், ஏப்ரல் 20 – ‘இணைய சமநிலை’ (Net Neutrality)-ஐ கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக்கின் ‘இண்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) திட்டமும் இணைய சமநிலைக்கு எதிரான ஒன்று என பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் முற்றிலும் மறுத்துள்ளார்.

இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ள மார்க், “இணைய சமநிலையை எங்கள் நிறுவனமும் ஆதரிக்கின்றது. உலகில் உள்ள அனைவரையும் இணையத்தால் இணைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் இண்டர்நெட்.ஆர்க். இதன் மூலம் கிராமப் பகுதிகளுக்கும் இணையத்தை கொண்டு சேர்க்க முடியும்.”

“நாங்கள் இந்த திட்டத்தை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து செயலிகளுக்கும் இத்திட்டம் பொதுவான ஒன்று” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் இண்டர்நெட்.ஆர்க் குறித்து உருவான பெரிய சர்ச்சைக்கு, மார்க் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கிடையே, இந்தியாவில் இணைய சமநிலையைக் கட்டுப்படுத்த நினைக்கும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ (TRAI) -க்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.