Home அவசியம் படிக்க வேண்டியவை இரண்டாமிடத்திற்கு கூகுள், மைக்ரோசாப்ட் கடும் போட்டி – முதலிடத்தில் ஆப்பிள்!

இரண்டாமிடத்திற்கு கூகுள், மைக்ரோசாப்ட் கடும் போட்டி – முதலிடத்தில் ஆப்பிள்!

561
0
SHARE
Ad

Google-And-Microsoftகோலாலம்பூர், ஏப்ரல் 27 – உலக அளவில் இருக்கும் பன்னாட்டு  நிறுவனங்களுக்கு இடையே போட்டி என்பது இயற்கையான ஒன்று.  தற்போது தொழில்நுட்ப உலகில், மிக முக்கிய நிறுவனங்களாகத் திகழும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையே, யார் உலக அளவில் இரண்டாவது மதிப்பு மிக்க நிறுவனம் என்பதற்கான கடுமையான போட்டி நிலவி வருகின்றது. முதலிடத்தில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் ஆப்பிள் முன்னிலை வகிக்கின்றது.

‘டெக் க்ரன்ச்’ (Tech Crunch) இணையதளம் ஒவ்வொரு ஆண்டும், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பினை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு இதுவரை நடத்தி உள்ள கணக்கெடுப்புகளின் படி, “ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இவற்றில் ஆப்பிள் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு முன்னிலை வகிப்பதால், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் இடையே இரண்டாம் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகின்றது”

“தற்போதய நிலவரப்படி கூகுள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு, 385.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மைக்ரோசாப்ட்டை பொருத்தவரையில், அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 389.24 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அந்நிறுவனம், கூகுளை விட 3.65 பில்லியன் டாலர்கள் முன்னிலை வகிக்கின்றது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என்று டெக் க்ரன்ச் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, வேறு நிறுவனங்கள் ஆப்பிளுக்கு போட்டி அளிக்கும் விதத்தில் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.