Home நாடு லண்டனில் ஆபாச வழக்கில் சிக்கிய மலேசிய மாணவருக்கு மாரா ‘இரண்டாவது வாய்ப்பு’

லண்டனில் ஆபாச வழக்கில் சிக்கிய மலேசிய மாணவருக்கு மாரா ‘இரண்டாவது வாய்ப்பு’

695
0
SHARE
Ad

_67919833_67919781கோலாலம்பூர், மே 6 – லண்டனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை வைத்திருந்த குற்றத்திற்காக 5 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள மலேசிய மாணவரான நூர் ஃபிட்ரிக்கு, நாடு திரும்பியவுடன் மீண்டும் தனது படிப்பை தொடர ‘இரண்டாவது வாய்ப்பு’ வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாரா கல்வி நிறுவனத்தின் சபை உறுப்பினர்களில் ஒருரான நசிர் ஹுசைன் அக்தார் ஹுசைன் ‘தி ஸ்டார்’ செய்தி இணையதளத்திடம் கூறுகையில்,

“கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் மாரா தலைவர் ஆகியோரிடையே நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடலில், தண்டனைக்குப் பிறகு அம்மாணவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாரா முடிவெடுத்துள்ளது”

#TamilSchoolmychoice

“அவர் தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் சரி படுத்திக் கொள்ள நாங்கள் ஆதரவளிப்போம். மாரா கல்வி நிறுவனத்தில் மீண்டும் படிப்பை தொடரலாம்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சலுகை நூர் பிட்ரிக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட நசிர், மாரா கல்வி நிதி பெற்று வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள் யாராக இருந்தாலும், இது போன்ற வழக்குகளில் சிக்கினால் அவர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் சரி படுத்திக் கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும் என்று நசிர் குறிப்பிட்டுள்ளார்.

 மிக மோசமான ஆபாச காணொளிகள்

லண்டனில் இம்பீரியல் கல்லூரி (Imperial College) மாணவரான நூர் பிட்ரி அஜ்மீர் நோர்டினுக்கு (வயது 23), மாரா (Majlis Amanah Rakyat -Mara) என்று அழைக்கப்படும் கல்வி நிறுவனம் நிதி வழங்கியது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி லண்டனில் உள்ள நூர் பிட்ரியின் வீட்டில்

லண்டன் போலீசார் அதிரடியாக நுழைந்து அவரது படுக்கையறையில் சோதனையிட்டனர்.

அப்போது சிறுவர், சிறுமிகளின் 30 ஆயிரம் ஆபாச காணொளிகளும், படங்களையும் வீட்டில் உள்ள கணினியில் வைத்திருந்தது லண்டன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றுள் பெரும்பாலானவை மிக மோசமான, ஆபாசமான பதிவுகள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இணைய கணக்கின் மூலமாக எண்ணிலடங்கா ஆபாச காணொளிப் பதிவுகள்
மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதை கவனித்த போலீசார், அதை வைத்து மாணவர் நூரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நூர் பிட்ரிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.முன்னதாக தன் மீதான 13 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

நூர் பிட்ரி கடந்த 2011-ல் அனைத்துலக கணித ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.