Home தொழில் நுட்பம் போக்குவரத்து நெரிசலான இடங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கூகுள் மேப்! 

போக்குவரத்து நெரிசலான இடங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கூகுள் மேப்! 

445
0
SHARE
Ad

Facebook-Messenger-Video-Callingநியூ யார்க், மே 23 – அமெரிக்காவின் ஆயுதப் படையில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தின விடுமுறைகள் இன்று முதல் துவங்க உள்ளன. இதனால், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம், தனது மேப் சேவையில் புதிய மேம்பாடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மேம்பாட்டின் படி, வாகன ஓட்டிகள் எந்ததெந்த இடங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே மிக எளிதாக கண்டறிந்து விடலாம். மேலும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், நாம் பயணிக்க வேண்டிய மாற்றுப் பாதையையும் கூகுள் மேப் காட்டிவிடும். மேலும், வாகன ஓட்டிகள் ஏன் அந்த மாற்றுப் பாதையை எடுக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் கூகுள் மேப் தெரிவித்துவிடும்.

அமெரிக்காவில் கூகுள் மேப்பின் இந்த புதிய மேம்பாடு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்டிரொய்டு கருவிகள் மட்டுமல்லாது ஐபோன், ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் கருவிகளிலும் கூகுள் மேப்பை இலவசமாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், இந்த சேவையில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூகுளின் பணி தலை சிறந்ததாக உள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனமும் சமீபத்தில் கூகுளுக்கு, இந்த சேவையில் கடும் போட்டி அளிப்பதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள ‘கோஹரன்ட் நேவிகேஷன்’ (Coherent Navigation) எனும் நிறுவனத்தை வாங்கியது. எனினும் ஆப்பிள், கூகுளுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் முன்னேற நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.