Home உலகம் ரோஹின்யா மக்களை அங்கீகரியுங்கள் – மியான்மருக்கு உலக நாடுகள் அழுத்தம்!

ரோஹின்யா மக்களை அங்கீகரியுங்கள் – மியான்மருக்கு உலக நாடுகள் அழுத்தம்!

451
0
SHARE
Ad

myanmarநியூ யார்க், மே 28 – இனப்படு கொலை என்ற அளவில் பூதாகரமாகி உள்ள ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தற்போது உலக நாடுகளின் கவனைத்தைப் பெற்றுள்ளது. புத்த மதத்தவர்கள் மட்டுமல்லாது ரோஹின்யா மக்களையும் மியான்மர் குடிமக்களாக அங்கீகரியுங்கள். அவர்களுக்கும் முழு உரிமை அளியுங்கள் என உலக நாடுகள் மியான்மருக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

ஆங்கிலத்தில் ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’  (Survival of the Fittest) என்ற பழமொழி உண்டு. ‘பலம் பொருந்தியது பிழைத்துக் கிடக்கும்’ என்பதே அதன் பொருள். பல்வேறு நாடுகளில் நடக்கும் இனப் படுகொலைகள் இந்த பழமொழிக்கான உதாரணமாகி வருகின்றன. மலேசியா-தாய்லாந்து எல்லையில் கொத்து கொத்தாக மனித சடலங்களும், சவக் குழிகளும் கண்டுபிடிக்கப்பட்ட போது, பரபரப்பை ஏற்படுத்திய ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தற்போது மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளின் முயற்சியால் உலக கவனத்தைப் பெற்றுள்ளது.

மியான்மரில் வசிக்கும் ரோஹின்யா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் காரணமாக பலர் அகதிகளாக வெளியேறுவதும் பலர் அங்கேயே மடிவதும் பல வருடங்களாக நடந்து வந்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஐநா அகதிகள் ஆணையம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை இந்த விவகாரத்தில் தலையிட வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

உலக நாடுகள் மியானமரை அழுத்துவதால், அந்நாட்டின் மற்றொரு மதத்தவரான புத்த பிட்சுக்கள் நேற்று மிகப்பெரிய அளவிலான போராட்டத்தையும், பேரணியையும் முன்னின்று நடத்தினர். அந்த போராட்டத்தில் ரோஹின்யா முஸ்லிம்களுக்காக மியான்மருக்கு அழுத்தம் தரக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், ரோஹின்யா குடியேறிகளுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையமும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் வலியுறுத்தத் துவங்கி உள்ளன. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக வரும் 29-ம் தேதி பேங்காக்கில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.