Home இந்தியா தெலுங்கானாவில் இன்று மட்டும் வெயிலுக்கு 100 பேர் பலி!

தெலுங்கானாவில் இன்று மட்டும் வெயிலுக்கு 100 பேர் பலி!

517
0
SHARE
Ad

summer3111ஐதராபாத், மே 29 – தெலுங்கானா மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இன்று மட்டும் 100 பேர் பலியுள்ளனர். இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே உள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு கடந்த ஒரு வாரத்தில் 1500 பேர் பலியாகினர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தெலுங்கானாவில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் கொடுமைக்கு ஏராளமான முதியோர்களும், தொழிலாளர்களும் பலியாகி வருகின்றனர்.

ஆந்திராவின் வடக்கு மற்றும் ராயலசீமா பகுதியில் நேற்று பெய்த மழை அப்பகுதி மக்களுக்கு சிறிது நிம்மதியை தந்தாலும் தெற்கு கடலோர ஆந்திராவில் வெயிலின் தாக்கம் குறையவில்லை . இந்நிலையில் தெலுங்கானாவில்2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதையடுத்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் குடிநீர் வினியோகம் வழங்கவும், மருத்துவமனைகளை தயாராக வைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் 43 பேர், குஜராத்தில் 7 பேர், டெல்லியில் 2 பேர் என நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 1825 பேர் பலியாகினர். பஞ்சாப், அரியானா உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.