Home தொழில் நுட்பம் இனி ‘மெசெஞ்ஜர்’ செயலியை மேம்படுத்த பேஸ்புக்கில் கணக்கு அவசியமில்லை! 

இனி ‘மெசெஞ்ஜர்’ செயலியை மேம்படுத்த பேஸ்புக்கில் கணக்கு அவசியமில்லை! 

373
0
SHARE
Ad

Facebook-Messenger-1கோலாலம்பூர், ஜூன் 26 – பேஸ்புக் நிறுவனம் எப்படியேனும் தனது ‘மெசெஞ்ஜர்’ (Messenger) செயலியைப் பிரபலப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும்,சேவைகளையும் தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்கு முன்னர் பேஸ்புக் வழியே பணப் பரிவர்த்தனைகள் அறிவிப்பினை வெளியிட்ட அந்நிறுவனம், தற்போது தற்போது தனது பிரதான வழிமுறையையே மெசெஞ்ஜர் செயலிக்காக மாற்றிக் கொண்டுள்ளது.

இதுவரை ‘மெசெஞ்ஜர்’ செயலியை இயக்கவோ, மேம்படுத்தவோ வேண்டுமானால், பேஸ்புக்கில் கணக்கு இருத்தல் அவசியம். இந்நிலையில், வர்த்தக நோக்கங்களுக்காக மட்டும் ‘மெசெஞ்ஜர்’ செயலியைப் பயன்படுத்த விரும்புகின்றவர்கள், தங்கள் தொலைபேசி என்னை மட்டும் பதிவு செய்து இந்தச் செயலியை இயக்கலாம்.

இது தொடர்பாக பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “பேஸ்புக்கில் அனைவரும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அந்த வகையில், மெசெஞ்ஜர் சேவையை நீங்கள் பயன்படுத்த, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம், பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கின்றது. தற்சமயம் பேஸ்புக்கில் சுமார் 600 மில்லியன் பயனர்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.