Home இந்தியா திருவனந்தபுரத்தில் கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- மின்சாரம் துண்டிப்பு!

திருவனந்தபுரத்தில் கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- மின்சாரம் துண்டிப்பு!

490
0
SHARE
Ad

thiruதிருவனந்தபுரம், ஜூன் 29- கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நீர்ப்பெருக்கின் காரணமாக அருவிக்கரை அணை உடனடியாகத் திறக்கப்பட்டது. இதன் காரணமாகக் கிள்ளியார், கரமனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

#TamilSchoolmychoice

மேலும் பலத்த காற்று வீசியதால் 8,260 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன; 72 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) சேதம் அடைந்துள்ளன.

இதனால், சுமார் 1,200 கி.மீ தூரத்திற்கு மின்சார இணைப்பு பாதிப்படைந்துள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

திருவனந்தபுரத்தில் தம்பானூர் சாலை, ஆற்றுக்கால், கரமனை, கரிமடம் காலனி, பூஜப்புரை, பழவங்காடி சந்திப்பு மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

எனவே, இப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இக்கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.