Home தொழில் நுட்பம் ‘இ-சிம் கார்டுகளை’  அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஆப்பிள், சாம்சுங்!

‘இ-சிம் கார்டுகளை’  அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஆப்பிள், சாம்சுங்!

626
0
SHARE
Ad

esimகோலாலம்பூர், ஜூலை 17 – நாம் அனைவரும் பெரும்பாலும் தனித்தனியான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைத் தான் பயன்படுத்துகிறோம். இவற்றின் திட்டங்களும் (Plan) நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். நாட்டுக்கு நாடு வேறுபாடும் உண்டு. இந்நிலையில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தால், இந்த கற்பனையை சாத்தியமாக்கத் தான் ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்கள் இ-சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் தொலைத்தொடர்பில் பொதுவான கட்டமைப்புகளை உருவாக்குவதே இ-சிம் கார்டு முறையின் நோக்கமாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே உலகின் பெரும்பான்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தொடங்கிவிட்டன. இதன் படி உலகம் முழுவதும் பொதுவான தரநிர்ணயம் செய்யப்பட்ட அமைப்பு உருவாக்கப்படும்.

இந்த ‘இ-சிம் கார்டுகளின் படி, பயனர்கள் வேறு நாடுகளுக்கு செல்லும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டின் சிம் கார்டுகளை பெற வேண்டிய அவசியமில்லை. எகிறிவிடும் ரோமிங் கட்டணங்களும் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டுகளை மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இப்படி பல்வேறு சிறந்த பயன்கள் இந்த இ-சிம் கார்டுகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், 2016-ம் ஆண்டு இறுதிக்குள் இ-சிம் கார்டுகள் அறிமுகமாகிவிடும் என்று கூறப்படுகிறது. எனினும், பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டணங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எப்படி ஒரே கூரையின் கீழ் ஒரு பொதுவான திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் என்று தெரியவில்லை.