Home Featured நாடு நஜிப் பற்றி டுவிட்டரில் கருத்து: தேசநிந்தனைச் சட்டத்தில் கைது செய்ய காலிட் உத்தரவு!

நஜிப் பற்றி டுவிட்டரில் கருத்து: தேசநிந்தனைச் சட்டத்தில் கைது செய்ய காலிட் உத்தரவு!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் சகோதரர் சார்லஸ் நேற்று அளித்த சத்தியப் பிரமாணம் தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோரைப் பற்றி தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்தவரை தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்யும் படி தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் உத்தரவிட்டுள்ளார்.

FB

 

#TamilSchoolmychoice

பைசல் ரோஹ்பான் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், நஜிப்புக்கும் அவரது மனைவிக்கு அடுத்தவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வேலையே இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அல்தான்துயா மரணம், தனியார் துப்பறிவாளர் எஸ்.பாலசுப்ரமணியம், அராப் வங்கி நிறுவனர் ஹுசைன் அகமட் நஜாடி மற்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் ஆண்டனி மொராயிஸ் ஆகியோரின் மரணங்களை அந்நபர் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பதிவினை தனது டுவிட்டரில் பகிர்ந்த காலிட், அந்நபரைக் கண்டறிந்து தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.