Home Featured உலகம் காம நாவல்கள் உட்பட 240 பதிப்புகள் மீதான தடையை நீக்கியது சிங்கப்பூர்!

காம நாவல்கள் உட்பட 240 பதிப்புகள் மீதான தடையை நீக்கியது சிங்கப்பூர்!

1972
0
SHARE
Ad

fanny-hill-movie-poster-1965-1020427094சிங்கப்பூர் – பாலுணர்வைத் தூண்டும் வகையிலான நாவல்கள், புத்தகங்கள் என சுமார் 240 பதிப்புகளின் மீதான தடையை சிங்கப்பூர் ஊடக மேம்பாட்டு அதிகார சபை (எம்டிஏ) நேற்று அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

விரும்பத்தகாத வெளியீடுகள் சட்டத்தின் கீழ் அப்பதிப்புகள் கடந்த 1967 -ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அப்புத்தகங்களில் ‘திராவிட நாடு’ போன்ற காலனித்துவ எதிர்ப்பு புத்தகங்களும், ‘த லாங் மார்ச்’ போன்ற கம்யூனிச சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகங்களும், 18-ம் நூற்றாண்டில் முதன் முதலாக பதிப்பிக்கப்பட்ட ‘பேனி ஹில்’ போன்ற பாலுணர்வைத் தூண்டும் வகையிலான நாவல்களும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

அதிரடியாக அப்புத்தகங்கள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் ஊடக மேம்பாட்டு அதிகாரசபை கூறுகையில், சமுதாய நெறிகளுக்கும், கால ஓட்டத்திற்கும் ஏற்ப அப்புத்தகங்கள் மதிப்பிடப்பட்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் தற்போது 240-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் 17 பதிப்புகள் தடை செய்யப்பட்டே வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், ‘பெந்தௌஸ் – Penthouse’ போன்ற ஆபாச இதழ்களும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.