Home Featured வணிகம் பணத்துடன் பயனர்களின் நேரத்தையும் சேமிக்க பேங்க் நெகாரா புதிய திட்டம்!

பணத்துடன் பயனர்களின் நேரத்தையும் சேமிக்க பேங்க் நெகாரா புதிய திட்டம்!

508
0
SHARE
Ad

bank-negara-appகோலாலம்பூர் – வங்கி, நிதி, மருத்துவம் என பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் உள்ளங்கையில் வந்தாகவேண்டிய நிர்பந்தத்தை திறன்பேசிகள் ஏற்படுத்தி விட்டன. இந்நிலையில், பயனர்களின் பணம் மட்டுமல்லாது நேரத்தையும் கருத்தில் கொண்டு பேங்க் நெகாரா மூன்று புதிய செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய இந்த இந்த செயலிகள், பயனர்களின் நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவும் என்று பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.

‘மைபிஎன்எம்’ (MyBNM), ‘பிஎன்எம் மைலிங்க்’ (BNM MyLINK) மற்றும் ‘மைதபுங்’ (MyTabung) என்ற அந்த மூன்று செயலிகளின் பயன்பாடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நிதி சார்ந்த அண்மைச் செய்திகளுக்கு மைபிஎன்எம் செயலியும், பேங்க் நெகாராவின் புதிய நாணய மற்றும் நிதி கொள்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், நிதிச் சேவை வழங்குபவர்களுடன் பயனர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் பிஎன்எம் மைலிங்க் செயலியும், பயனர்களின் வருவாய், அவர்களின் செலவீனங்கள், சேமிப்புகள் போன்றவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க மைதபுங் செயலியும் பயன்படும் என்று தெரிய வருகிறது.