Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: 3,794 பேர் களம் காண்கின்றனர்! ஜெயலலிதாவை எதிர்த்து மட்டும் 44 பேர்!

தமிழகத் தேர்தல்: 3,794 பேர் களம் காண்கின்றனர்! ஜெயலலிதாவை எதிர்த்து மட்டும் 44 பேர்!

410
0
SHARE
Ad

Tamil Nadu-elections-2016சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, நேற்றுடன் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில், 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உள்ளிட்ட 45 பேர் களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலிலும் ஆண் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது என்பதோடு பெண்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே கட்சிகளால் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் காணும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்களில், 3 ஆயிரத்து 472 பேர் ஆண்கள். 320 பேர் மட்டுமே பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.

#TamilSchoolmychoice

jayalalithaaமுதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் யாரும் மனுக்களைத் திரும்பப் பெறவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஆற்காடு, வானூர், கூடலூர், வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

இனிமேல்தான், தொகுதிகளைக் குறிவைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் என்றும், தேர்தல் பிரச்சாரங்கள் இனிமேல்தான் அனல் தெறிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.