Home Featured கலையுலகம் “இது நம்ம ஆளு” – வெளியீட்டுக்குத் தடை!

“இது நம்ம ஆளு” – வெளியீட்டுக்குத் தடை!

504
0
SHARE
Ad

Idhu-Namma-Aalu-Movie-Photosகோலாலம்பூர் – சிம்பு-நயன்தாரா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் தயாரிப்புக்குக் கடன் வழங்கியவர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மலேசியாவிலும் இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை.