Home Featured தொழில் நுட்பம் வேஸ் (Waze)-ல் இனி வழி சொல்லப் போவது டோனியின் குரல்! (காணொளி)

வேஸ் (Waze)-ல் இனி வழி சொல்லப் போவது டோனியின் குரல்! (காணொளி)

786
0
SHARE
Ad

tonyகோலாலம்பூர் – மலேசியாவில் சாலைப் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில், மக்களிடையே வேஸ் (Waze) என்ற செயலி மிகப் பிரபலமாக இருந்து வருகின்றது.

விபத்து, சாலை சீரமைப்பு, வாகனச் சோதனை உள்ளிட்ட தகவல்களை வேஸ் செயலி உடனுக்குடன் வழங்கி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு அது பெரிதும் உதவியாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், வேஸ் செயலி குரல் அறிவிப்பு (Voice Prompt) என்ற புதிய மேம்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

அதில் சிறப்பு என்னவென்றால், அதற்கு குரல் கொடுக்கப்போகும் பிரபலம் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தான்.

மலேசிய சாலைகளில் வாகனமோட்டிகளுக்கு வசதியாக, டோனி உடனுக்குடன் போக்குவரத்துத் தகவல் கொடுத்து, அவர்களை வழிநடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோனி பெர்னாண்டசின் குரலை வேஸ் செயலிக்குக் கொண்டு வந்தது மெய்சிலிர்க்கும் வகையில் இருப்பதாக வேஸ் மலேசியா விற்பனைப் பிரிவு நிர்வாகி எட்வர்ட் லிங் தெரிவித்துள்ளார்.

வேஸ் செயலி மூலம் சாலைப் போக்குவரத்து குறித்த தகவலுடன் டோனி பெர்னாண்டஸ் உங்களை  வழிநடத்தினால் எப்படி இருக்கும்? இதோ இக்காணொளியில் கண்டு ரசிக்கலாம்:-