Home Featured தமிழ் நாடு தமிழகக் கவிஞர் இன்குலாப் காலமானார்

தமிழகக் கவிஞர் இன்குலாப் காலமானார்

1069
0
SHARE
Ad

ingulab-poet-deceased

சென்னை – தமிழ் இலக்கிய உலகின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

எஸ். கே. எஸ். சாகுல் அமீது என்னும் இயற்பெயர் கொண்ட இன்குலாப் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்   பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்

#TamilSchoolmychoice

பல இதழ்களில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய இன்குலாப் ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பையும், ‘துப்பாக்கிகள் பூவாலிகள்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலையும் படைத்துள்ளார்.

பொதுவுடமைச் சிந்தனைக் கருத்துகளை மையமாக வைத்து எழுதியவர் இன்குலாப்.

கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி, அவ்வை மற்றும் மணிமேகலை ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட மொத்த கவிதைகளின் தொகுப்பு , ‘ஒவ்வொரு புல்லையும்’ என்னும் பெயரில் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்தது.

மார்க்சிய ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலையும் வெளியிட்டுள்ளார்.

இவரது ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்னும் புகழ் பெற்ற பாட்டு இன்று வரை எண்ணற்ற மேடைகளில் மக்களால் பாடப்படுகிறது.