10-வது திருமண நாள்: அபிஷேக், ஐஸ்வர்யா ஜோடி மும்பை கோவிலில் வழிபாடு!

Aishwarya Raiமும்பை – அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடி, நேற்று வியாழக்கிழமை தங்களது 10-வது திருமண நாளை முன்னிட்டு, மகள் ஆராத்யாவுடன் மும்பையில் உள்ள சித்திவிநாயக் ஆலயத்தில் வழிபாடு செய்தனர்.

இவர்கள் வந்ததை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதவே, பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்த கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது.

எனினும், அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் மிகவும் இயல்பாகவே இருந்ததோடு, பொறுமையுடன் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையில் அண்மைய காலமாக பிரச்சினைகள் இருந்து வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான நிலையில், இருவரும் தங்களது திருமண நாளில் ஆலய தரிசனத்திற்கு வந்திருந்தது அவர்களது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

 

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts