தனுஷுக்கு சாதகமான தீர்ப்பு – மேலூர் தம்பதியின் மனு தள்ளுபடி!

dhanushசென்னை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் இறுதித் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்த வழக்கில், கதிரேசன் – மீனாட்சி தம்பதியின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

திரைப்படங்களில் தனுஷ் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருப்பவர், சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் தான் என்றும், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார் என்றும் மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, கடந்த ஆண்டு மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

அதோடு, தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தங்களுக்கு, தனுஷ் மாதம் 65,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts