கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் வேண்டுகோள் (காணொளி)

சென்னை – 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில், கர்நாடகாவிற்கு எதிராக நடிகர் சத்யராஜ் பேசிய கடுமையான பேச்சுக்களுக்கு மன்னிப்புக் கேட்டால் மட்டுமே, தற்போது அவர் நடித்து வெளியாகவிருக்கும் பிரம்மாண்டப் படமான ‘பாகுபலி 2’-ஐ கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான சில கன்னட அமைப்புகள் போர்கொடி தூக்கியிருக்கின்றன.

இந்நிலையில், அதற்கு ‘பாகுபலி 2’ திரைப்பட இயக்குநர் ராஜமௌலி விளக்கம் ஒன்றை வெளியிட்டார். இத்திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதால் சத்யராஜுக்கு நஷ்டமில்லை என்றும், அத்திரைப்படத்திற்குப் பின்னால் இருக்கும் ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு வீணாவதோடு, தயாரிப்பாளர்கள் தான் நஷ்டமடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அவரையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை சத்யராஜ் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில், தான் பேசிய பேச்சு கர்நாடக மக்களைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், என்றாலும், தமிழர்கள் விவகாரத்தில் தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ் பேசியிருக்கும் காணொளியை இங்கே காணலாம்:-

 

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts